India’s Largest & Most Trusted Diabetes Chain

வணக்கம்!! ஸ்வீட் ஹேக்கிற்கு வருக!!

ஸ்வீட் ஹேக் ஒரு விளையாட்டு செயலி. இதை விளையாடும்போது விளையாடுபவர் நீரிழிவு நோயை பற்றி கற்றுக் கொள்வர்.

விளையாட்டின் ஒவ்வொரு அம்சமும் விளையாடுபவருக்கு வெவ்வேறு தகவல்களை கற்பிக்கும் விதத்தில் விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது – இதில் உணவு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் மருத்துவ தகவல்களும் அடங்கும்.
விளையாட்டு பல்வேறு நிலைகளைக் கொண்டுள்ளது மற்றும் ஒவ்வொரு நிலையிலும் அதற்க்கு தொடர்புடைய தகவல்கள், குறிப்புகள் மற்றும் வீடியோக்கள் மூலம் ஆரோக்கியமான மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை பழக்கங்களைக் காட்டுகிறது . இந்த செயலி மக்கள் நம்பும் கட்டுக்கதைகளையும், பொய்யான எண்ணங்களையும் அழிக்க உதவுகிறது. எனவே ஸ்வீட் ஹேக்கின் இந்த பயணத்தை மேற்கொண்டு, உங்கள் ஆரோக்கியமான உடல்நல மாற்றத்தை பாருங்கள்!!

விளையாட்டை சுலபமாக விளையாடுவதற்கும் குறிப்பாக சில கடினமான நிலைகளை கடந்து செல்வதற்கும் உங்களுக்கு உதவ சில குறிப்புகள் இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இது விளையாட்டை மிகவும் எளிதாக விளையாடுவதற்கும் ரசிப்பதற்கும் உங்களுக்கு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.

மேலும் படிக்க.
1) விளையாட்டின் ஆரம்ப திரையில் விளையாட்டு குறிக்கோளுக்கு கீழே உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள சில சக்திகள் உள்ளன. எந்த நிலையிலும் விளையாட்டை தொடங்குவதற்கு முன், விளையாட்டில் நீங்கள் பயன்படுத்த விரும்பும் பவர்-அப்களை(சக்தியை) தேர்வுசெய்ய வேண்டும், அதை நீங்கள் ஆரம்ப திரையில் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையெனில், விளையாட்டில் கூடுதல் பவர்-அப்களை(சக்தியை) நீங்கள் விளையாட்டினை தொடங்கியதற்கு பின் பயன்படுத்த முடியாது.

2) நகர்வுகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள நிலைகளை முடிக்க இந்த சக்திகளை நீங்கள் பயன்படுத்தலாம்.

3) ஒரு நிலையை விளையாடுவதற்கு முன்பே நீங்கள் பயன்படுத்த விரும்பும் சக்தியைத் தேர்ந்தெடுக்கவும், முந்தைய நிலைகளில் ஏற்கனவே நீங்கள் சம்பாதித்த நாணயங்களைப் பயன்படுத்தி புதிய சக்தியை(பவர்-அப்) வாங்கலாம்.

4) நீங்கள் ஒரு நிலையை முடிக்க முடியாமல் போனால், விளையாட்டு திரையின் வலது புற மூலையில் கொடுக்கப்பட்டுள்ள சக்திகளை வாங்கலாம். ஏற்கனவே மேலே குறிப்பிட்டுள்ளபடி விளையாட்டை விளையாடும்போது புதிய சக்திகளை உங்களால் பெற முடியும்.

5) இப்போது, இது உங்கள் நாணயங்களை நிரப்ப ஒரு ஏமாற்று அல்லது எளிய வழி போன்றது, குறிப்பாக உங்களின் நாணயம் குறைவாக அல்லது தீர்ந்து போனால், நீங்கள் மறுபடியும் முந்தைய நிலைகளில் ஏதேனும் எளிதான நிலையை மீண்டும் விளையாடி அதிக நாணயங்களை சம்பாதித்து நிரப்பி கொள்ளலாம். இது நீங்கள் ஏதேனும் நிலையை முடிக்க முடியாமல் சிக்கி இருக்கும்போது உங்களுக்கு பவர் அப்களை (சக்தியை) வாங்க உதவும், இதனால் அந்த நிலையை கடக்க அதிக வாய்ப்புகள் அமையும்.

6) ஆராம்ப திரையின் இடது பக்கத்தில் ஒரு சக்கர ஐகான் உள்ளது. நாணயங்களையும், சக்திகளையும் வெல்ல சக்கரத்தை சுழற்றுங்கள்.

7) ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சக்தியை நீங்கள் வாங்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.